மூன்றே நாளில் 5 கோடி வசூலித்த 'ஃபைட் கிளப்'

19 Dec 2023

‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்க அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில் கடந்த வாரம் டிசம்பர் 15ம் தேதி வெளியான படம் ‘பைட் கிளப்’.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. இப்படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் வெளியான மூன்றே நாட்களில் 5 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசை, விக்கி மற்றும் அம்ரின் - அபுபக்கர் சண்டைப் பயிற்சி, லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு ஆகியவை விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது. படத்தின்  கிளைமாக்ஸ் காட்சியில் கிருபாகரன் படத்தொகுப்பு செய்த விதம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

படத்தைத் தயாரித்த ரீல் குட் பிலிம்ஸ் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கிடைத்து வரும் வரவேற்பால் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என சரியாக கணித்து படத்தை வாங்கி வெளியிட்ட லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

Tags: fight club, vijay kumar, lokesh kanagaraj

Share via: