ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ‘ஃபர்ஹானா’ படம் உருவாகி வருகிறது. 

‘ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது. இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார். 

கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார். 

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.