தியேட்டர்களில் புதிய படம், பாராட்டும் துரை சுதாகர்

13 Nov 2020

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன.

இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நடிகர் துரை சுதாகர், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்  துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தவர், தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா மீது சினிமா தொழில் மீதும் ஆர்வம் கொண்ட நடிகர் துரை சுதாகர், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு, புது படங்கள் ரிலீஸ் ஆவது குறித்து கூறுகையில், “கடந்த 8 மாதங்களாக முடங்கியிருந்த திரைத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 

திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால், மக்களை திரையரங்கங்களுக்கு வர வேண்டும். அதற்கு புதிய திரைப்படங்கள் உடனடியாக வெளியாக வேண்டும் என்ற நிலையில், திரையுலகில் ஏற்பட்ட சிறு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டு, தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளிவர வழிவகுத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றியையும், தற்போதைய கடினமான காலக்கட்டத்திலும் தங்களது படங்களை திரையரங்கங்களில் வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படங்கள் மூலம் திரையுலகிற்கு புத்துணர்ச்சியும், திரையுலகினர் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சமும் கிடைக்க வேண்டும், என்று அனைத்து கடவுல்களையும் வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Tags: durai sudhakar

Share via:

Movies Released On March 15