வசூலில் வெற்றி: ‘டிமான்ட்டி காலனி 3’ உறுதி
23 Aug 2024
‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் வசூல் வெற்றியால், இதன் 3-ம் பாகம் உறுதியாகி இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி 2’. அஜய் ஞானமுத்துவே தயாரித்த இந்தப் படத்தினை BTG நிறுவனம் முழுமையாக கைப்பற்றி ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் பொருட்செலவிற்கு திரையரங்க வசூல், இதர உரிமைகள் விற்பனை, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை ஆகியவற்றால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் சுமார் 15 கோடியைத் தொடும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த வெற்றியை முன்வைத்து, ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தினை உருவாக்க அஜய் ஞானமுத்து முடிவு செய்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றிணை இயக்கவுள்ளார். அந்தப் பணிகளை முடித்துவிட்டு ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தினை இயக்கி, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். மேலும், 2026-ம் ஆண்டு வெளியீடாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளார்.
Tags: demonty colony