தனுஷ் 43 - படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

08 Jan 2021

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரப்மானது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ‘தொடரி, பட்டாஸ்’ படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் இது. இந்தப் படம் தனுஷ் நடிக்கும் 43வது படம். அவர் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம், கர்ணன்’  படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அவற்றிற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகும்.

‘துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன்’ படங்களக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நான்காவது படம் இது.

 ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.  ‘பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன்’ படங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் 5வது படம் இது.
 
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்த ஸ்முருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பாடலாசிரியர் விவேக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.

இன்று சென்னையில் ஆரம்பமான முதல் நாள் படப்பிடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில், விவேக் எழுதி, தனுஷ் பாடிய பாடலுக்கான படப்பிடிப்பு ஜானியின் நடன இயக்கத்தில் ஆரம்பமானது.

Tags: danush, karthick naren, gv prakashkumar, malavika mohanan, samuthirakani

Share via: