புதிய வடிவில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 7, நடுவராக இணைந்த நடிகை ரோஜா
30 Mar 2026
விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான ‘குக்கு வித் கோமாளி’ இனி புதிய அவதாரத்தில் வருகிறது!
வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களை கட்டிப்போட்டு, சிரிப்பு அலையை ஏற்றும் இந்த ஷோவில் பங்கேற்பாளர்கள் சமைக்க, தாமு அண்ட் கோ ருசித்து கலாய்ப்பது என எல்லாமே கலாட்டா தான். இப்போது விஜய் டிவி அதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகிறது.
“நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு”ன்னு ரசிகர்கள் நினைக்கலாம்… ஆனா விஜய் டிவி இன்னும் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா மசாலா’ போட்டு அசத்தப் போகிறது!
புதிய சீசனில் நடுவராக இணையும் பிக் பாம் – நடிகை ரோஜா! செம்பருத்தி ரோஜா! ஆந்திராவின் முன்னாள் எம்எல்ஏவுமான அவர் வரும் அட்டகாசமான ப்ரோமோவே இப்போது விஜய் டிவியில் கலக்கி வருகிறது. ரோஜா நடுவராக சேர்ந்ததும் க்ளாமர் + கலாய்த்தல் கலந்து ‘செம்ம’ அடிக்கும் என்கிறார்கள் ஷோவை நெருக்கமாக அறிந்தவர்கள்.
மேலும், ஷோவின் ஃபார்மட்டே இனி ‘டபுள் ட்ரபுள் ’! தம்பதிகள் தான் இனி போட்டியில் கலந்துகொள்வார்கள். கணவன்-மனைவி சேர்ந்து சமைப்பது, அவர்களுக்குள் போட்டி, புரிதல், உணர்வு… எல்லாம் ஒன்றாக கலந்து வரும். நல்லா சமைத்தால் பரிசு உறுதி. ஆனால் நடுவர்கள் அதை அவ்வளவு சுலபமாக விடப் போவதில்லை. கலாய்த்து, கிண்டல் அடித்து, டபுள் ட்ரபுளை உறுதி செய்வார்கள்!
ப்ரோமோவே கிளாசிக்காக வந்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்கனவே ஆகாயத்தைத் தொட்டுவிட்டது.
சம்யுக்தா – அனிருத், அரவிந்த் சைஜு – சங்கீதா, நிஷா – ரியாஸ், கானா வினோத் – பாக்யா உள்ளிட்ட ஜோடிகள் இந்த சீசனில் கலந்துகொள்ளும் அசத்தல் லிஸ்ட் இது. இவர்கள் எல்லோரும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதி !
இந்த புதிய வடிவத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருப்பது – பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ. ஸ்டார் விஜய்யுடன் நீண்டகால பங்களிப்பு கொண்ட இந்த நிறுவனம், ‘கலக்கப் போவது யாரு’வை புத்தம் புதிய லுக்கில் கொடுத்து பெரிய வெற்றி பெற்றது. அதேபோல ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலையும் இவர்கள்தான் தயாரித்தார்கள். திரைப்படத் துறையிலும் ‘கெணத்த காணோம்’ படத்தைத் தயாரித்தவர்கள்.
எனவே ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7 ஒரு பயங்கர கலாட்டா கலவையாக இருக்கும் என ரசிகர்கள் ஏற்கனவே நம்பத் தொடங்கிவிட்டார்கள். எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!
Tags: குக் வித் கோமாளி, cook with comali

