மக்களிடம் அமோக வரவேற்பு... தியேட்டர் அதிகரிப்பு... உற்சாகத்தில் ”சார்” படக்குழுவினர்
20 Oct 2024
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறது.
இப்படம் மக்கள் மத்தியிலும் திரை ஆர்வலர்கள் மத்தியிலும் பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியான போதிலும், வெளியான முதல் நாளிலேயே மக்களின் ஆதரவில், தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மிக முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும், கல்வி எனும் ஆயுதத்தை சார் திரைப்படம் தூக்கி பிடிப்பதாகவும், சமூகம் தலைநிமிர கல்வி அவசியம் என இப்படம் உரக்க சொல்லுவதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இப்படம் பேசும் கருத்தியலை வாழ்த்தி வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை போல, இப்படமும் சமூக அக்கறையுடனும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாகவும் சார் திரைப்படம் இருப்பதாக பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள்.
போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Tags: bose vengat, sir, sss pictures