காந்தா - நம்பிக்கையுடன் அறிமுகமாகம் பாக்யஸ்ரீ போர்ஸ்
10 Aug 2025
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும்திரைப்படமான படமான “காந்தா” மூலம் தமிழில் பிரமாண்டமாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்.
இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக வேகமாக வளர்ந்து வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான “காந்தா” மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் “காந்தா” திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாகும். பாக்யஸ்ரீ, அந்தக் காலத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
துல்கர் சல்மான், சமுத்திரகனி போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்திருக்கும், பாக்யஸ்ரீ தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். காலத்துக்கேற்ற உடல் மொழி, உணர்ச்சி பூர்வமான உரையாடல் — இவற்றை கட்டுப்பாட்டுடனும் ஆழத்துடனும் வெளிப்படுத்தி, தனது முழு திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
படத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாரம்பரிய தோற்றம், ஏற்கனவே பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
இப்படத்தில் நடித்து வரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ், “காந்தாவின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகுவது, என் வாழ்க்கையின் மிகச் சிறப்பு மிக்க தருணம். திறமையான குழுவுடன் இணைந்து இந்த அழகான கதையை உயிர்ப்பித்தது மிகப் பெருமை. நாங்கள் உணர்ந்த மாயாஜாலத்தை, பார்வையாளர்களும் உணருவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
காந்தா — ஒரு மாறுபட்ட திரை அனுபவத்துடன், தமிழ் சினிமாவுக்கு புதிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகம், இந்த ஆண்டின் மிகவும் பேசப்படும் அறிமுகங்களில் ஒன்றாக அமையும்.
Tags: Bhagyashri Borse, Kaantha