பாதாம்கீர் - முதல் பார்வை வெளியீடு

23 May 2026

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில்,  உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். 

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன்  மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags: badamkheer

Share via: