‘100’ படத்திற்குப் பிறகு மீண்டும் அதர்வா, சாம் ஆண்டனி கூட்டணி

07 Feb 2021

2019ம் ஆண்டில் வெளிவந்த ‘100’ திரைப்படத்திற்குப் பிறகு அதர்வா, இயக்குனர் சாம் ஆன்டன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படம் மூலம் இணைகிறது.

மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளிவந்த ‘மாறா’ படத்தைத் தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவா உள்ளது. அதோடு நகைச்சுவையும் படத்தில் இருக்கிறதாம். இணையவழி குற்றங்களும் படத்தின் கதைகளமாம்.

பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெறப் போகிறதாம். அதற்காக அதர்வா சிறப்புப் பயிற்சி பெற்று வருகிறாராம்.

ஜிப்ரான் இசையமைக்க, ரூபன் படத் தொகுப்பு செய்ய, கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.  சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர். படத்தொகுப்பை ரூபன் செய்ய, கிருஷ்ணன் வெங்கட் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்கிறார்

பிரதீக் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Tags: atharva, sam anton, maara

Share via: