பா ரஞ்சித் உதவி இயக்குனர் இயக்கும் படத்தில் அசோக் செல்வன்

01 Feb 2023

லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்  புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளர் தமிழழகன்  ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா  இசையமைக்கிறார்

இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது.

அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் பொரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி.

நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.
 

Tags: அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி

Share via: