அருள்நிதியை இயக்கும் பிரபு ஜெயராம்

31 Mar 2024

அருள்நிதி நடித்துவரும் படத்தினை இயக்கி வருகிறார் பிரபு ஜெயராம்.

2021-ம் ஆண்டு சோனி லைவ் ஓடிடியில் வெளியான படம் ‘என்னங்க சார் உங்க சட்டம்’. இந்தப் படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனை பிரபு ஜெயராம் இயக்க ஆர்.எஸ்.கார்த்தி நடித்திருந்தார்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த கதையின் பணிகளைத் தொடங்கினார். கடந்த ஆண்டு இந்தக் கதையில் அருள்நிதி நாயகனாக நடிப்பது உறுதியானது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தினை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே, இந்தப் படத்தினையும் தயாரித்து வருகிறது. இணையத்தில் பலரும் பிரபு ஜெயராம் படத்தில் அருண் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியிட்டு வருகிறார்கள். பலரும் அருள்நிதியைத் தான் அருண் விஜய் என தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

Tags: arulnithi, prabhu jayaram

Share via: