‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு

02 Feb 2021

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’.

பேன்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கி வருகிறார் பாரி கே. விஜய். இவர் ‘முண்டாசப்பட்டி, இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுளளது. 

பேன்டஸி படம் என்பதால் அதிக செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு நட்சத்திரங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளனராம். 

கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிந்த பீட்டர் ஹெய்ன், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரத்தியேகமாக வடிவமைத்து வித்தியாசமாகக் கையாண்டுள்ளாராம். 

மக்களை, சிரிப்பு மழையில் நனைய வைத்து குழந்தைகளை குஷிப்படுத்த 'ஆலம்பனா' தயாராகி வருகிறது.

Tags: vaibhav, parvathi nair, alambana, pari k vijay, hiphop tamizha

Share via: