அஜித் தந்த 1.25 கோடி நன்கொடை, விஜய் எவ்வளவு கொடுப்பார் ?

07 Apr 2020

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளும் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவிகளைக் கோரி வருகின்றன.

தொழில் துறை நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசிய ல் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர்கள், நடிகைகளை பெரிதாக நன்கொடை வழங்கவில்லை.

திரைப்படத் தொழிலாளர் அமைப்பான பெப்ஸிக்கு மட்டும் சில நடிகர்கள் உதவி செய்தனர்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் நன்கொடை வழங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் உதவி வழங்காதது பற்றி கடந்த பத்து நாட்களாகவே சர்ச்சை இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம், பெப்ஸி அமைப்புக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து அஜித் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

ஆனால், நன்கொடை பெற்றுக் கொண்டவர்கள் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்ட பிறகே மீடியாவிற்கும் தெரிய வந்தது. தான் செய்த உதவி குறித்து தன் தரப்பிலிருந்து எந்த விதமான செய்தியும் வெளியிடக் கூடாதென அஜித் உறுதியாக சொல்லிவிட்டாராம்.

அஜித் நன்கொடை வழங்கியதை அடுத்து விஜய் எவ்வளவு கொடுக்கப் போகிறார் என்ற கேள்வி உடனே எழும். நாம் அமைதியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. இப்போதே #PerfectCitizenThalaAJITH என்ற டிரென்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

அஜித் தந்த பிறகு விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் அவர் அளவிற்கு தர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

Tags: corona, vijay, ajith, pm cares fund, cm fund

Share via: