ZEE5 ஒரிஜினலில் "ஐந்தாம் வேதம்" அக்டோபர் 25முதல் ஸ்ட்ரீமாகிறது
18 Oct 2024
முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் 'ஐந்தாம் வேதம்' என்ற ஒரிஜினல் சீரிஸின், இதயம் அதிர வைக்கும் டிரெய்லரை வெளியிடுவதில் ZEE5 மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான டிரெய்லரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது பார்வையாளர்களை பண்டைய ரகசியங்கள் மற்றும் ஆபத்தான பயணங்கள் அடங்கிய புதிய உலகில் மூழ்கடிக்கிறது. அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், 'மர்மதேசம்' என்ற கிளாசிக் தொடரை உருவாக்கிய புகழ்மிகு இயக்குநர் நாகா இந்த சீரிஸை இயக்கியுள்ளார். இந்த அதிரடி த்ரில்லர் சீரிஸில் சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்குச் செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடையப் போராடுவது அவளுக்குத் தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளைச் சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE5 இல் அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்ட்ரீமாகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம் மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!
அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்/நல்லமை ராமநாதன் கூறுகையில்..., “புராணக் கதைகளை சஸ்பென்ஸுடன் இணைக்கும் இந்த தலைசிறந்த படைப்பான ஐந்தாம் வேதத்தில் ZEE5 உடன் இணைந்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. மிகத் திறமையான இயக்குநர் நாகா எங்களுடன் இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கதை சொல்லல் இந்த சீரிஸுக்கு மிகப்பெரும் பலமாகும் , அனு பாத்திரத்தில் சாய் தன்சிகாவின் நடிப்பு ரசிகர்களை ஈர்க்கும், சந்தோஷ் பிரதாப் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்த சீரிஸ் நமது கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையைக் கொண்டாடுகிறது, இது அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படைப்பாக இருக்கும்.
இயக்குநர் நாகா கூறுகையில்.., “ஐந்தாம் வேதத்தை இவ்வளவு பிரமாண்டமாக உருவாக்கி வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கதையானது புராணத்தையும் அறிவியலையும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, விதியின் விளையாட்டுக்களையும் மற்றும் நம் பண்டைய ரகசியங்களையும் ஆராய்கிறது. ZEE5 போன்ற உலகளாவிய பிளாட்ஃபார்முடன் இணைவது எனக்குப் பெருமையான தருணம், ஏனெனில் இது உலகளவில் எங்கள் படைப்பு, பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய உதவுகிறது. பார்வையாளர்கள் எங்களுடன் இணைந்து, இந்த பரபரப்பான பயணத்தை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!"
அனுவாக நடித்திருக்கும் சாய் தன்சிகா கூறுகையில்.., “இந்த சீரிஸின் டீஸர் வெளியிட்டதிலிருந்து, ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தும், பல செய்திகளைக் கேள்விப்பட்டு வருகிறேன், இவ்வளவு அன்பைப் பார்ப்பது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது ! இந்த டிரெய்லர் சீரிஸில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது, ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், இந்த பரபரப்பான சாகசத்தில் இன்னும் பல ஆச்சரியங்களைப் பெறுவீர்கள். இந்த வரலாற்றுச் சின்னத்தின் மகத்தான முக்கியத்துவத்தை உணர்ந்ததால், தமிழ்நாட்டிற்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குவதற்கான அனுவின் தேடலானது உயிர்வாழ்வதற்கான போராட்டமாக மாறுகிறது. ருத்ராபதியாக நடித்ததற்காகத் திரு ஒய்.ஜி-க்கு சிறப்பு நன்றி. ZEE5 இல் ஷோ பிரீமியர் செய்யப்படும், இந்தக் கதையின் ஆழத்தையும் உற்சாகத்தையும் அனைவரும் அனுபவிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்!"
ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !
Tags: aintham vedham, zee 5, streaming