ஏலே - மக்களிடம் ஐஸ் விற்ற சமுத்திரக்கனி
29 Jan 2021
ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட், வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஏலே’.
இப்படத்தில் கிராமப்புறங்களில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் முத்துக்குட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி.
படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த தைப்பூசத் தினத்தன்று திருத்தணி முருகன் கோவில் முன்னால் ‘ஏலே’ ஐஸ் வண்டியில் சமுத்திரக்கனி குச்சி ஐஸ் விற்பனை செய்தார்.
சமுத்திரக்கனி ஐஸ் விற்பதைக் கண்டு ஆச்சரியத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.
அதைத் தொடர்ந்து சிறுவாபுரி முருகன் கோவிலிலும் ஐஸ் விற்பனை செய்தார் சமுத்திரகனி. அங்கும் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் பொருட்டு, விஜய் சேதுபதி தனது தந்தையுடனான உறவு குறித்து பேசிய சிறு வீடியோ ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
Tags: samuthirakani, aelay, halitha shameem