தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், “வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2ம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்” உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டபடங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார். 

சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில்  ‘சிவப்பு – மஞ்சள் – பச்சை’ படத்தைத் தயாரித்தார். தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தையும் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

நல்ல கதைகளும், உணர்வுப்பூர்மான காட்சியமைப்புகளும் என்றென்றும் வெற்றிபெறும் என்ற ஃபார்முலாவில் விநியோகம், தயாரிப்பு என தொடர்ந்து செய்து வரும் ரமேஷ் பி.பிள்ளை இன்றைய சூழலில் மட்டுமல்ல எந்த சூழலிலும் இந்த ஃபார்முலா வெற்றி பெறும் என்ற உறுதியில் இருக்கிறார். சினிமா மீது உள்ள பேஷன் மற்றும் திறமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் முடிவில் நல்ல கதையம்சத்தோடு, காட்சிக்குத் தேவையான பிரம்மாண்டமான பொருட்செலவில் 8 புதிய படங்களை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

டான் சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கசான்ட்ரா, அனுசுயா நடிக்கும் ‘பிளாஷ்பேக்’

பிரபுதேவா, ‘மஞ்ச பை’ ராகவன் இணையும் புதிய படம் 'மை டியர் பூதம்'

கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம்

அமல் கே ஜோபி இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம்

நயன்தாரா நடிக்கும் இரண்டு புதிய படங்கள். இதில் ஒரு படத்தை விபின் இயக்குகிறார். மற்றொரு படம் பற்றி விரைவில் அறிவிப்பு வரும்.

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் நடிப்பில், ராஜா சரவணன் இயக்கத்தில் ‘ரவுடி பேபி’ 

ஒரே நாளில் இத்தனை படங்களின் அறிவிப்புகளை வெளியிட்ட தயாரிப்பாளரை திரையுலகத்தினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.