• Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • TV / OTT
  • Years
  • Books
  • Others
  • Home
  • News
  • Gallery
  • Videos
  • Reviews
  • Upcoming
  • Movies
  • Celebrities
  • Tv News
  • Years
  • Books
  • Others
Home News

‘பிக் பாஸ்’ வின்னர் ஆரி நாயகனாக நடிக்கும் புதிய படம்

news
JAN-19-2021

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும்   இன்வெஸ்ட்டிகேசன்  க்ரைம், கமர்சியல் த்ரில்லராக  உருவாகும் புதிய படம் ஆரம்பமாகி உள்ளது. 

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றி பெற்றவர் ஆரி அர்ஜுனன். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததுமே அவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கடந்த 10 வருடங்களாக படதொகுப்பாளராகவும்,  இந்தியாவில் செலிபிரிட்டி போட்டோகிராபராக  வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமாகிறார்.

“மாயா, நெடுஞ்சாலை, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜுனன் கதாநாயகனாகவும், வித்யா பிரதீப் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முனிஷ்காந்த் உட்பட பலரும்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஆரி முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக 
மதுரை, திண்டுக்கல், பழனி  உள்ளிட்ட நகரங்களில்  படப்பிடிப்பு  நடைபெற உள்ளது., 

அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு, தமிழில்  பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய  இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். 
 
ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்தின் இசையமைப்பாளராகவும், பிரபல ஒளிப்பதிவாளர்  ராம்ஜியின் ‘ஆயிரத்தில் ஒருவன், வேலைக்காரன்,  தனி ஒருவன், இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிவி கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும்,  நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக் கண்’ படத்தில் கலை இயக்குனராகப் பணியாற்றிய கமலநாதன் இப்படத்தில் கலை இயக்குனராகவும்,  விஜயின் ‘மெர்சல்’ படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற  பாடல் மூலம் புகழ்பெற்ற பிரபல பாடலாசிரியர் விவேக் பாடலாசிராயராகவும் மற்றும்  படத்தொகுப்பாளராக அருள் சித்தார்த், சண்டை பயிற்சி இயக்குனராக சக்தி சரவணன் மற்றும்  பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் சினிமாவின்  நிர்வாக தயாரிப்பாளராகவுள்ள   விசுவநாதன் இத்திரைப்படத்தின்
நிர்வாக தயாரிப்பாளராகவும்,  முன்னணி பிஆர்ஓவாக வலம் வரும் நிகில் முருகன் இப்படத்திற்கு பிஆர்ஓவாகவும் பணிபுரிய உள்ளனர்.

More Recent News

Previous Post ‘கபடதாரி’ இசை வெளியீடு - விஜய், சிம்புவுக்கு நன்றி சொன்ன சிபிராஜ் news JAN-19-2021
Next Post ஜனவரி 20ம் தேதியில் வெளியான படங்கள்... news JAN-20-2021
Latest NewsView All
  • விஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்

    NEWS MAR-06-2021
  • மார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-06-2021
  • இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...

    NEWS MAR-05-2021
  • மார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...

    NEWS MAR-05-2021
  • ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

    NEWS MAR-04-2021

You May Like   

  • Chakra / சக்ரா (2021)

  • Kamali From Nadukkaveri / கமலி from நடுக்காவேரி (2021)

  • Sillu Vandugal / சில்லு வண்டுகள் (2021)

  • Pazhagiya Naatkal / பழகிய நாட்கள் (2021)

  • Aangal Jakkirathai / ஆண்கள் ஜாக்கிரதை (2021)

  • Loga / லோகா (2021)

  • Facebook
  • Twitter
  • linkedin
  • Rss
Copyright © 2021, s4s. All Rights Reserved