பிக் பாஸ் புகழ் ஆரவ் திருமணம், பிரபலங்கள் வாழ்த்து

06 Sep 2020

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்வானார்.

அதற்கு முன்னதாகவே சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவரும் நடிகை ஓவியாவும் காதலிப்பதாக பரபரப்பு எழுந்து அவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.

இருவருமே பின்னர் தாங்கள் காதலிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆரவ், இன்று காலை ராஹி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராஹியும் ‘ஜோஷ்வா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஆரவ் தற்போது ‘ராஜ பீமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரு

இவர்களது திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags: aara, bigg boss

Share via: