‘கள்ளபார்ட்’ விரைவில் படப்பிடிப்பு நிறைவு

Release Date:25 Nov 2018
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் ‘கள்ளபார்ட்’. அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட ‘கள்ளபார்ட்’ ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப் பட்டது. அரவிந்த்சாமி, ரெஜினா இருவரும் அந்தக் காட்சிகளில் நடித்தார்கள். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தவுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share via: