சிம்பு வெளியிடும் ‘சாஹசம்’ முதல் பார்வை...

Release Date:04 Aug 2015
ஸ்டார் மூவீஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்க அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் பிரசாந்த், அமன்டா, நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தில் தமன் இசையில் அனிருத், சிம்பு உட்பட பலர் பாடியிருக்கிறார்கள். விரைவில் மலேசியாவில் இப்படத்தின் இசையை பிரம்மாண்டமான ஒரு விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். நாளை ஆகஸ்ட் 5ம் தேதி ‘சாஹசம்’ படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டரை சிம்பு அவருடைய டிவிட்டர் வலை தளத்தில் வெளியிட உள்ளார். பிரசாந்துக்கு மீண்டும் ஒரு சாஹச சாதனை புரியும் விதத்தில் இப்படம் தயாராகி வருவதாக தயாரிப்பாளரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தெரிவித்தார்.

Share via: