அதிபர் - ரவுடி கதாபாத்திரத்தில் நந்தா...

Release Date:29 Apr 2015
பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவை சரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலி முருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதி கண்ணன், மோகன்ராம், சம்பத் ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில் குமார், கோவை செந்தில், அழகு, கோவை பாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். “மாயி, திவான், மாணிக்கம்” ஆகிய படங்களை இயக்கிய சூர்யபிரகாஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் புதிய வரவாக நடிகர் நந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷ் கூறியதாவது, “நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறாகர். நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ரவுடி கதாப்பாத்திரத்தில்தான் நந்தா நடிக்கிறார். அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட், நட்புக்காக நல்லவனாக மாறுகிறார். இந்த கதாபாத்திரம் நந்தாவுக்கு ஒரு சவாலாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

Share via:

Movies Released On December 09