திறமைசாலிகளை தேர்ந்தெடுத்துத் தரும் ‘இன்டர்வியூ டெஸ்க்’

Release Date:12 Aug 2017
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான பிச்சுமணி துரைராஜ் என்பவரின் தனித்துவமான START UP நிறுவனமே இன்டர்வியூ டெஸ்க். சென்னையில் நடைபெற்ற அதன் துவக்க விழாவில் பிச்சுமணி துரைராஜ் அது பற்றி பேசியதாவது... “வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனி நபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HR-அ என்னோட specialisationஆ தேர்ந்தெடுக்கக் காரணமா அமைஞ்சது. Malcolm Gladwellலோட 10,000-hour rule of specializationஅ ரொம்ப ஆழமா நான் நம்புறேன். பல வருடங்கள் HR துறையில எனக்கு கிடைச்ச அனுபவங்கள் அதுவும் KLA Tencor மற்றும் Amazon போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்ல இருந்தப்ப எனக்கு கிடைச்ச ஆழமான அனுபவம் மூலமா இந்த systemல உள்ள குறைபாடுகள் எனக்குத் தெளிவா புரிய ஆரம்பிச்சது (என்னடா இவரு ரஜினிகாந்த மாதிரி system சரியில்லைன்னு சொல்றேன்னு நினைச்சுடாதீங்க....) நான் சொன்னது HR Feldல உள்ள வேலைவாய்ப்புகள் சார்ந்த இடைவெளி. இந்த இடைவெளி நம்ம நாட்டு தொழில்துறையில மட்டுமில்ல உலக அளவுல இருக்கு. தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா கிளையன்ட் கூட சேர்ந்து வேலை பாக்குறப்பத்தான் இது ஒரு உலக பிரச்சனைன்னு நான் உணர்ந்தேன். இத பாசிட்டிவ் கண்னோட்டத்தோட பார்த்து வேலை வாய்ப்புத் துறையில உள்ள குறைகள சரி செய்யுறப்ப உலகளாவுல எண்ணற்ற வேலைவாய்ப்புகள ஏற்படுத்த முடியும். இண்டெர்நெட்டோட வளர்ச்சி வேகமா வளர வளர புவியியல் எல்லைகள் சுருங்கிகிட்டே வர்ற இந்த தருணமும் இந்தியாவுல கொட்டிக் கிடக்குற எண்ணற்ற திறமைசாலிகளூம் சந்தேகத்துகே இடமில்லாம ஒரு தொழில் புரட்சிய இங்க ஏற்படுத்த முடியும்ங்கிற நம்பிக்கைய எனக்கு கொடுத்தது. ஒரு நிறுவனத்தோட மிகப்பெரிய சொத்தே அதுல வேலைபாக்குற ஊழியர்கள்தான். அதனால தான் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சரியான திறமையான ஊழியர்கள தேர்ந்தெடுக்க எண்ணற்ற நேரத்த செலவு செய்யுறாங்க. ஒரு சரியான ஊழியர தேர்ந்தெடுக்க, திறமையற்ற, பாதியே தேர்ச்சி பெறும் நபர்கள்னு பலரையும் சந்திக்க வேண்டியிருக்கும். நாம விரும்புறோமோ இல்லையோ இதுதான் இயற்கை. ஒரு நபர வேலைக்கு அமர்த்த தேவைப்டற காலம் மிக மிக அதிகம், அது அந்த அந்த வேலைய பொறுத்தும் மாறுபடும், தங்களுக்கு வர்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள சரியான முறையில ஒரு நிறுவனம் பகுத்து பிரிச்சு பில்டர் பண்னி வைக்கலைன்னா நூற்றுக்கனக்கான பேர அவங்க இன்டர்வியு பண்ண வேண்டியிருக்கும். இதன் மூலமா நிறுவனங்கள் தெரிஞ்சே தங்களோட பொன்னான நேரத்த வீண் விரயம் செய்யுறாங்க. இங்க தான் ஒரு வேலைக்கான ஆட்கள சரியான முறையில தேர்ந்தேடுக்குறதுல திறமையான பல மாறுதல்கள கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்குங்குறது எனக்கு புரிஞ்சது. டன் கணக்குல இருக்குற விண்ணப்பங்கள பாக்குறதுக்கு ஒரு நல்ல முறை இருந்தா எப்பிடி இருக்கும்?. ஒரு தேர்ந்த அனுபவமிக்க குழு மொத்த விண்ணங்களையும் பார்த்து அதுல தேவையற்றத, களையெடுத்து நிறுவனத்தோட தேவைக்கேற்ப சரியான நபர்கள தேர்ந்தெடுத்து குடுத்தா எப்பிடி இருக்கும்?. யோசிச்சு பாருங்க ஒரு நிறுவனம் 500 விண்ணப்பங்கள்ல இருந்து ஆட்கள தேர்ந்தெடுக்குறதுக்கும், தேர்வு செய்யப்ப்பட்ட பத்து பேர்ல இருந்து சரியான ஆட்கள தேர்ந்தேடுக்குறதுல உள்ள வித்தியாசத்த, பத்து பேரை மட்டும் சந்திக்கிறப்ப ஒவ்வொரு நபர் கூடவும் நேர்முகத் தேர்வாளர் நிறையா நேரம் ஒதுக்கி பேச முடியும். ஆழமான கேள்விகள் கேட்க நேரம் இருக்கும். நேரம் மிச்சப்படுத்துதல் மட்டுமில்லாம தரமான திறமையான ஆட்கள பணியமர்த்த இந்த செயல்முறை வழி வகுக்கும். பல முன்னனி நிறுவனங்கள்ல பத்து வருசத்துகும் மேலா HRஆ நான் இருந்ததால பலரையும் சந்திச்சு சரியான ஒரு சிலர தேர்ந்தெடுக்குறதுல உள்ள கஷ்ட நஷ்டம் ரொம்ப நல்லாவே தெரியும். இதுல ஒரு சரியான வழிமுறை தேவைனு ஏங்கினதுண்டு. இப்ப ஐந்து வருசத்துக்கும் மேலா ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்திட்டு வர்றேன், பல முன்னனி நிறுவனங்கள் இதன் சேவைய உபயோகிக்கிறாங்க. இந்த அனுபவங்கள் மேலும் இந்த பிரச்சனைய ரொம்ப ஆழ்ந்து பார்க்க வாய்ப்பா அமைஞ்சது. பிரச்சனைகள பாசிட்டிவ் கண்ணோடத்துல வாய்ப்பா பார்த்து அத ஒரு ஐடியாவா மாத்துற சந்தர்ப்பத்ததான் ஒவ்வொரு தொழில் முனைவோரும் விரும்புவாங்க. எனக்கும் Interviewer Deskக்கோட ஐடியா இங்கதான் உதிச்சது. உலகத்தோட மிகப்பொரிய ‘interviewer community’ய ஏற்படுத்தனும்ங்கிற நோக்கத்தோட இந்தியாவோட முதல் on-demand interviewer platformஆ Interview Deskஅ ஆரம்பிச்சிருக்குறோம். ஒரு தனித்துவம் வாய்ந்த outsourced interview modelஅ நிறுவனங்களுக்குக் குடுத்து ஆள்சேர்ப்புக்காக அவங்க நேரத்தையும் பணத்தையும் 50% மேல மிச்சப்படுத்துற சேவைய தரணும்ங்கிறதுதான் எங்களோட குறிக்கோள். ஒரு தொழில் முனைவோரா உங்க நிறுவனத்தோட நேரமும் உழைப்பும் நீங்க தயாரிக்கிற பொருட்கள அல்லது குடுக்குற சேவைய மேம்படுத்துறதுலயும் செலவு செஞ்சாதான் உங்க வாடிக்கையாளரை நீங்க திருப்திப்படுத்த முடியும். இத Interview Desk சாத்தியப்படுத்துது. பல்வேறு வகையான நிறுவனங்கள் வளர வளர வெவ்வேறு வேலைக்கான ஆட்களுக்கான தேவைகளும் அதிகரிச்சுக்கிட்டே போகுது. குறிப்பிட்ட துறை சார்ந்த அனுபவமும் அதுல முதிர்ந்த தேர்ச்சியும் உள்ள திறமையாளர்களுக்கான தேவையும் அதிகரிக்குது. இவங்கள மாதிரியான ஆட்கள தேர்வு செய்ய அந்த அந்தத் துறைசார்ந்த அனுபவ அறிவு ரொம்பவும் அவசியம் அப்பதான் சரியான திறமையாளர்களை தேர்வு செய்ய முடியும். இது ஒரு நிறுவனத்துல வேலை பாக்குற மனிதவள அதிகாரிக்கு சாத்தியமே இல்லாத விஷயம். இங்க தான் InterviewDesk model ரொம்பவே தெளிவா பயன்படுது. இங்க வெவ்வெறு துறைகள்ல தேர்ந்த அனுபவமிக்க interviewers இருக்குறதினால சரியான ஆட்கள சரியான நேரத்துல வேகமா தேர்ந்தெடுக்க முடியும். HR community உள்ள பல முன்னோடிகள சந்திச்சு பல ஆராய்ச்சிக்கு அப்புறம் நானும் என் குழுவும் உருவாக்குனது இந்த INTERVIEW DESK. அதனால, இதற்கு உங்க ஆதரவு கண்டிப்பா கிடைக்கும்னு நம்புறோம்,” என்றார் பிச்சுமணி துரைராஜ்.

Share via:

Movies Released On July 27