தமிழ்ப் புத்தாண்டு - டிவிக்களில் புத்தம் புதிய படங்கள்

Release Date:12 Apr 2017
ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிவிக்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றன. ஏப்ரல் 14, 2017 - வெள்ளிக்கிழமை சன் டிவி மாலை 6 மணிக்கு - பைரவா பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் டிவி காலை 11 மணிக்கு - ஓ காதல் கண்மணி மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்த படம். இரவு 8 மணிக்கு - எம்.எஸ்.தோனி - ‘தி அன்டோல்ட் ஸ்டோரி’ தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ஜெயா டிவி காலை 11 மணிக்கு - காஷ்மோரா கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கார்த்தி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த படம். மாலை 6 மணிக்கு - கத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ தமிழ் மாலை 4 மணிக்கு - சைத்தான் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

Share via: