Nivas

தமிழில் 16 வயதினிலே படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நிவாஸ். தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், கோழி கூவுது, தனிக்காட்டு ராஜா, கொக்கரக்கோ, மை டியர் லிசா, செண்பகமே செண்பகமே, எங்க ஊரு மாப்பிள்ளை, ஊரு விட்டு ஊரு வந்து, பாஸ் மார்க், செவ்வந்தி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி” ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தெலுங்கில் கே.விஸ்வாநாத் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா நடித்த ‘சாகர சங்கமம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நிவாஸ் தான்.

பிப்ரவரி 1ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

என் திரைப் பயணமான
16 வயதினிலே முதல்
தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற  பெரும் படைப்பாளி,
இந்திய திரை உலகின் மிகச்
சிறந்த ஒளிப்பதிவாளர்,
என் நண்பன் திரு. நிவாஸ் 
மறைவு அதிர்ச்சியளிக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள்.

பாராதிராஜா

Share via:

Filmography